Thursday, February 25, 2010

அதங்கோடு




தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தமிழ் கூறு நல்லுலகில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவன்கோடு வட்டத்தில் அமைந்துள்ள ஊர்தான் அதங்கோடு. அமைந்துள்ளது.அகத்தியரின் பன்னிரு சீடர்களில் ஒருவரான தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டசானை உலகத்திற்கே தந்து பெருமை தேடி கொண்ட ஊர் இவ்வூர்.

அதன்கோட்டின் அமைவிட எல்லை:

வடக்கே கருப்பட்டியாலுமூட்டிலிருந்து தெற்கே முளமூட்டுக்கடவு வரையிலும் கிழக்கே மடிச்சலிலிருந்துமேற்கே மணக்காலை வரையிலுமாக அதங்கோடு அமைந்துள்ளது.இயற்கைத்தாய் எல்லாவித வளங்களையும் அழகினையும் இவ்வூருக்கு குறைவற தந்திருக்கிறாள்.


ஆறு:

"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என்பதற்கு ஏற்ப தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதியாக ஓடி வளம் கொழிக்கிறது.
இந்த ஆறானது அதன்கோட்டில் அஞ்சாலி கடவு முதல் முளமூட்டுக்கடவு , செங்கிலாகம் கடவு , நொத்தோலி கயம்(மண்ணடிக்கடவு), ஆலஞ்ஜாலி கடவு மற்றும் குந்திரிமூட்டுக்கயம் வரை வடக்கு தெற்காக ஓடிக்கொண்டு இருக்கிறது.



மக்கள் தொகை:
படித்தவர்களை  அதிகளவில் தனகத்தே  கொண்ட  ஊர்  இவ்வூர் .




நன்றி


செல்வி கோ.அருள்மொழி


No comments:

Post a Comment